Uncategorized
சைடு போஸில் தெறிக்க விடும் அழகு…! – ஏங்க வைக்கும் வாணி போஜன்..!
நடிகை வாணி போஜன் திரையுலகுக்கு வருவதற்கு முன்பு விமான பணி பெண்ணாக பணியாற்றி இருக்கிறார். மேலும் இவர் மாடலிங் துறையில் நுழைந்து பின்னர் சினிமாவுக்கு வந்தவர்.
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததின் மூலம் சின்னத்திரை நயன்தாரா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய இவர் ஜெயா டிவியில் வெளிவந்த மாயா என்ற தொடரில் அற்புதமாக நடித்திருக்கிறார்.
இதனை அடுத்த இவருக்கு சன் டிவியில் தெய்வமகள் என்ற தொடரில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை பக்காவாக பயன்படுத்திக் கொண்ட இவர் தன்னுடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டதோடு திரைப்பட வாய்ப்பையும் பெற்றார்.
அந்த வரிசையில் இவர் ஓர் இரவு என்ற திரைப்படத்தில் நடிக்க தொடங்கியவர் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் பேமஸாக ஆனார்.
இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் உள்ளது...