இப்போ அந்த பழக்கத்தை நிறுத்திட்டேன்.. வெக்கமில்லாமல் வெளிப்படையாக சொன்ன நடிகை சோனா..!
அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை சோனா. 2001 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் உன் வாசம் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெறும் வரவேற்பை ஏற்படுத்தியது.
மேலும் அந்த திரைப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெரிய வெற்றியை கொடுத்தன. அதன் மூலம் அறிமுகமான காரணத்தினால் இவருக்கும் வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு என்று மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்த தொடங்கினார் சோனா.
கதாநாயகியாக முதல் படம்:
2008 ஆம் ஆண்டு வெளியான பத்து பத்து என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக முதன்முதலாக அறிமுகமானார். அதற்கு முன்பு வரை துணை கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார். ஆனால் கதாநாயகியாக அறிமுகமாகும் போது கவர்ச்சி கதாநாயகியாக அறிமுகமானது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
பொதுவாகவே கவர்ச்சி காட்டி நடித்து நடிக்கும் நடிகைகள் தொடர்ந்து சினிமாவ...