ராயன் படத்தை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட பதிவை பாருங்க..!
ஒவ்வொரு நடிகருக்குமே அவர்களுக்கு ஐம்பதாவது திரைப்படம் என்பது மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும். ஏனெனில் 50 திரைப்படங்கள் தொடர்ந்து சினிமாவில் நடிப்பது என்பது எல்லா நடிகர்களுக்குமே கை கூடுவதில்லை.
எவ்வளவோ நடிகர்கள் 10 படங்களுக்கு கூட தாக்குப் பிடிக்க முடியாமல் தமிழ் சினிமாவில் இருந்து விலகுகின்றனர். இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது 50வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த 26 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.
ராயன் திரைப்பட வெற்றி:
தனுஷ் திரைத்துறைக்கு வந்த பொழுது அவர் இவ்வளவு காலங்கள் சினிமாவில் தாக்குப் பிடித்து பெரிய நடிகராக வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் பார்ப்பதற்கு ஒல்லியாக மிகவும் சின்ன பையனாக இருந்தார் தனுஷ்.
மேலும் அந்த சமயத்திலேயே அவர் அதிகமாக உருவ கேலிக்கு உள்ளாகி வந்தார். இந்த நிலையில் கண்டிப்பாக தனுஷ் தாக்கு...