Uncategorized
“என்ன கண்ணு இது.. இப்படி உப்பி போயிருக்கு..” – ரேஷ்மா பசுபுலேட்டியை பார்த்துச ஷாக் ஆன ரசிகர்கள்..!
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தின் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமான இவர் தெலுங்கில் சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
தமிழில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றலாம் என்று வந்த இவருக்கு அடித்தது ஜாக்பாட் என சீரியலில் ஹீரோயின் ரேஞ்சுக்கு இருக்கக்கூடிய ஒரு கதாபாத்திரம் கிடைத்தது. நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான வம்சம் சீரியல் இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.
இந்த சீரியலை தொடர்ந்து வாணி ராணி, மரகத வீனை உள்ளிட்ட சீரியலில் நடித்த பிரபலமான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கொடுமையான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்....