ஏதோ ராணுவத்துக்கு குடுத்தா மாதிரி பெருமை வேற.. இயக்குனர் ஷங்கரை விளாசும் ரசிகர்கள்..! என்ன காரணம்..?
தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக திகழும் ஷங்கர் பற்றி யாரும் அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
தமிழ் திரை உலகுக்கு பிரம்மாண்டத்தை கொண்டு வந்து அனைவரது விழிகளையும் அகல விரித்து பார்க்க வைத்த ஷங்கர் தற்போது போட்டிருக்கும் பதிவால் இணையமே பற்றிக் கொண்டு எரிகிறது.
இதற்குக் காரணம் அண்மையில் இவரது இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் கலவை ரீதியான விமர்சனங்களை பெற்று இருப்பதோடு இயக்குனர் ஷங்கர் பற்றிய பிரம்மாண்டத்தையும் ரசிகர்கள் மத்தியில் தவிடு பொடி ஆக்கிவிட்டது
ஏதோ ராணுவத்துக்கு குடுத்தா மாதிரி பெருமை வேற..
ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்த ஜீன்ஸ் ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன், எந்திரன், 2.0 போன்ற படங்களை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது.
இவர் இயக்குனராக இருந்ததோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக இருந்து சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். அந...