Uncategorized
கைநாட்டு வைக்கிறீங்க…. அப்படின்னா? ரொம்ப ஜாக்கிரதையா வைக்கணும்… இல்லேன்னா நிலைமை இப்படி தான்!
என்ன கைநாட்டு பற்றிய தலைப்பு டைட்டிலை இருக்குனு நீங்க பாக்கறீங்களா?. மிக விரைவில் தமிழ் திரைப்படத்தில் வெளிவரக்கூடிய சிக்னேச்சர் படத்தைப் பற்றி தான் இங்கு நான் கூறுகிறேன்.
இந்த படத்தின் ஜீவன் மற்றும் நட்டி இணைந்து நடிக்கிறார்கள்.ஜீவனுக்கு மேசடிகள் பண்ணக்கூடிய கதாபாத்திரத்தில் நடிப்பது ஒன்றும் புதிதானது அல்ல. இவர் ஏற்கனவே இது போன்ற கதையில் நடித்து இருக்கிறார். இந்த கதைக்கான கதைக்களம் ஆனது படிப்பறிவில்லாத மக்களிடையே இருந்து கையெழுத்துக்களை திருடி பல ஏக்கர் நிலத்தை அபகரிப்பது தான். இந்த நில மோசடியை ஜீவன் மற்றும் நட்டி இணைந்து செய்கிறார்கள் அதைச்சுற்றி தான் படத்தின் கதை நகர்கிறது.
இந்தக் கதையில் சாதாரண மக்களோடு இணைந்து பயணித்து அவர்களின் டேட்டாக்களை திருட கூடிய அதி தீவிரமான தொடராக ஜீவன் இருக்கிறார். டேட்டாக்களை பயன்படுத்தி மக்கள் இடையே இருக்கக்கூடிய பொருட்களையும் நிலங்களையும் மோசடி செய்...