600 கோடி பட்ஜெட்… 7 நாளில் கல்கி 2898 AD படம் செய்துள்ள மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..?
திரையுலகை பொருத்த வரை பல்வகையான திரைப்படங்கள் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கூடிய வகையில் வெளி வரும். அதிலும் குறிப்பிட்டு இயக்குனர்களின் பெரிய பட்ஜெட் படம் என்றால் அனைவரும் ஆவலோடு காத்திருப்பார்கள்.
அந்த வகையில் அண்மையில் வெளி வந்த கல்கி 2898 AD படம் மக்கள் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டதோடு மட்டுமல்லாமல் கலவை ரீதியான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
600 கோடி பட்ஜெட்..
பாகுபலி படம் போல் மிக பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகிய இந்த திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி இருந்தார். ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளி வந்த நடிகையர் திலகம் படம் தேசிய விருதை பெற்றது உங்கள் நினைவில் இருக்கலாம்.
இதனை அடுத்து இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கக்கூடிய படங்களின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் சுமார் 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் கல்கி 289...