Uncategorized
“சோன முத்தா… போச்சா….” – புளூ சட்ட மாறன் இயக்கிய “ஆண்டி இண்டியன்” படத்தின் பரிதாப ரிசல்ட்..!
யூடியூப்பில் பிரபல சினிமா விமர்சகராக வலம் வரும் ப்ளூ சட்டை மாறன், ’ஆண்டி இந்தியன்’ படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். ’ஆடுகளம்’ நரேன், ராதாரவி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். ஆதம் பாவா தயாரிப்பில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
சலசலப்புக்குரிய சினிமா விமர்சகராக அறியப்படும் 'ப்ளூ சட்டை' மாறன் எனும் இளமாறன் இயக்கியுள்ள முதல் சினிமா 'ஆன்டி இண்டியன்'. பாட்ஷாவை யாரோ கொலை செய்து விடுகிறார்கள். பாட்ஷாவின் தாய், தந்தை இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பாட்ஷாவை அடக்கம் செய்வதில் சிக்கல் உருவாகிறது. அது தேர்தல் சமயமாகவும் உள்ளது.
பாட்ஷாவின் சவத்தை வைத்துக் கொண்டு மதவாதிகளும் அரசியல்வாதிகளும் செய்யும் ஆதாய அரசியலே இப்படத்தின் திரைக்கதை. தமிழ் சினிமாவில் நிறைய இளம் இயக்குனர் வருகிறார்கள், சிலர் வெற்றியடைகின்றனர...