என் ஆம்பள வெர்ஷன்.. என்னால அது இல்லாம இருக்கவே முடியாது.. நடிகை நீபா ஓப்பன் டாக்..!
தற்போது சீரியல் நடிகைகளுக்கும் திரைப்பட நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் கிடைத்திருக்க கூடிய ஆதரவு சமமாக உள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் பிரபல சீரியல் நடிகையான நீபா பார்ப்பதற்கு பழக்கப்பட்டவர் போல தோற்றத்தில் காட்சி அளிப்பார்.
இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததோடு நடன ரியாலிட்டி ஷோர்களின் கலந்து கொண்டு தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டவர்.
நடிகை நீபா..
நடிகை நீபா ஆரம்பத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
இதை அடுத்து இவருக்கு சின்னத்திரையில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கவிதாஞ்சலி என்ற சீரியலில் இவர் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்திருக்க கூடிய இவர் விஜய் நடிப்பில் வெளி வந்த காவலன் திரைப்படத்தில் க...