“நான் நெனச்ச மாதிரியே என்னை ஏமாத்திட்டான்..” காதலன் குறித்து நிவேதா பெத்துராஜ்..! யாரா இருக்கும்..?
தமிழகத்தில் பிறந்தாலும் துபாயில் வளர்ந்த மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கியவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ் .
தமிழ் சினிமாவில் முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த "ஒரு நாள் கூத்து" திரைப்படத்தின் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமாகி இருந்தார்.
நடிகை நிவேதா பெத்துராஜ்:
அவர் அறிமுகமான முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் அந்த திரைப்படத்தில் நிவேதா பெத்துராஜ் நடிப்பு ஒட்டுமொத்த இளவட்டத்தையும் வசீகரித்து இழுத்து என்றே சொல்லலாம்.
முதல் படத்திலேயே ஏகோபித்த வரவேற்பு பெற்ற நடிகை நிவேதா பெத்துராஜ் தொடர்ச்சியாக அடுத்து பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் .
இதனிடையே தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை செலுத்திய அவர் அங்கும் சில திரைப்படங்களில் நடித்திரு...