இவர் கூட டேட்டிங் போகணும்.. மேடையிலேயே ஓப்பனாக கூறிய நடிகர் கவின்..!
தமிழ் தமிழ் சினிமாவில் முன்பை விட இப்பொழுது ஒரு நடிகருக்கு கதாநாயகனுக்கான அந்தஸ்து கிடைப்பது என்பது கடினமான ஒரு விஷயமாக ஆகிவிட்டது.
ஏனெனில் அதிகபட்சம் சின்ன படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்கள் புதுப்புது கதாநாயகர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய வண்ணம் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எல்லோரையுமே மக்கள் கதாநாயகனாக ஏற்றுக் கொள்வது கிடையாது.
மக்கள் யாரை கதாநாயகனாக ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் தான் சினிமாவில் தொடர்ந்து வளர்ந்து வர முடியும் என்கிற நிலைமை இருக்கிறது. இதில் சில நடிகர்கள் விதிவிலக்காக மக்கள் மத்தியில் ஒரு சில திரைப்படங்களிலேயே அதிக வரவேற்பு பெறுகின்றனர்.
வரவேற்பை பெற்ற நடிகர்:
அப்படியாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக இருப்பவர்தான் நடிகர் கவின். லிஃப்ட் என்கிற திரைப்படத்தில் கவின் நடித்த பொழுது அந்த திரைப்படம் திரையரங்கில் நேரடியாக வெளியாகவில்லை இருந்தாலும்...