எம்புட்டு கொழுப்பு இருக்கணும்.. இயக்குனரின் கௌதம் கார்த்திக் காட்டிய தெனாவெட்டு.. விளாசும் பிரபலம்..!
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் சினிமாவில் ஜெயித்து அரசியல் கட்சி துவங்கும் அளவிற்கு பெரிதாக வளர்ச்சியை கண்டு இருக்கின்றனர். ஆனால் பல நடிகர்களின் வாரிசுகள் சில படங்களில் நடித்த உடனே வரவேற்பை இழக்கின்றனர்.
அடுத்து பெயர் சொல்லும் அளவுக்கு கூட திரைப்படங்கள் எதுவும் வராமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் 80களில் பிரபல நடிகராக இருந்து வந்த நவரச நாயகன் கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் முக்கியமான வாரிசு நடிகராவார்.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் கௌதம் கார்த்திக். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை கௌதம் கார்த்திக்கு சொல்லிக் கொள்ளும்படி வெற்றி படம் ஒன்று கூட அமையவில்லை.
வரிசையாக தோல்வி:
குறிப்பாக அவர் நடித்த முதல் திரைப்படமான கடல் திரைப்படமே தோல்வி படமாகதான் அமைந...