இது இல்லாம என்னால இருக்க முடியாது.. ஹேண்ட் பேக்கில் எப்போவுமே இருக்கும்.. நதியா ஓப்பன் டாக்..!
கவர்ச்சியாக நடித்தால் மட்டும் தான் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற முடியும் என்று பல நடிகைகள் நினைத்துக் கொண்டிருந்த பொழுது அதை உடைத்து சில நடிகைகள் தமிழ் சினிமாவில் கவர்ச்சி இல்லாமல் நடித்தும் கூட பெரும் உச்சத்தை தொட்டு இருக்கின்றனர்.
அப்படியான சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நதியா. நதியாவை பொறுத்தவரை எப்பொழுதுமே மிகவும் பாரம்பரியமான உடையில்தான் திரைப்படங்களில் தோன்றுவார்.
சினிமா வாய்ப்பு:
ஒருவேளை மாடர்ன் உடையில் அவர் நடித்தாலும் கூட அதுவும் நாகரீகமான அளவில் தான் இருக்கும். இதனாலேயே நதியாவிற்கு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்கள் உண்டு. 1984 ஆம் ஆண்டு மலையாள திரைப்படம் ஒன்றின் மூலமாகதான் முதன்முதலாக வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்தார் நதியா.
அதற்குப் பிறகு அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. 1986 ஆம் ஆண்டு பூக்களை பறிக்காதீர்கள் என்கிற திரைப்படம் மூலமாக ...