நடிகை திரிஷா திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..! கொளுத்தி போட்ட பிரபலம்..!
தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் திரிஷா முதன்முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் பட்டம் பெற்று அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அதே ஆண்டில் ஜோடி திரைப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.
நடிகையாக திரிஷாவின் பயணம்:
அதை அடுத்து அவருக்கு மளமளவென வாய்ப்புகள் குவிய 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக தன்னுடைய அறிமுகத்தை கொடுத்தார்.
முதல் படத்திலேயே மிகச் சிறந்த நடிகையாக தென்பட்ட திரிஷாவுக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது கொடுக்கப்பட்டது.
அதை அடுத்து சாமி, ஆறு, ஆதி, கிரீடம், குருவி ,பீமா, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா , சகலகலா வல்லவன் ,பூலோகம், கொடி , மோகினி இ...