தீயாய் பரவும் விஷால் பேசிய ஆடியோ.. அதிரும் கோலிவுட் வட்டாரம்.. பரபரப்பில் பிரபலங்கள்..!
சமீப காலமாக நடிகர் விஷால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார். அவர் வாய் திறந்து பேசினாலே, ஏதாவது ஒரு வில்லங்கம் வந்து விடுகிறது. இப்போதுதான் ஓட்டு போட சைக்கிளில் வந்து ஒரு புது பிரச்சனையை கிளப்பி விட்டார்.
ரத்னம் பிரமோ நிகழ்ச்சிகளில் கதாநாயகி பிரியா பவானி சங்கரை வரவிடாமல் தடுத்தார் என்று குற்றச்சாட்டும் எழுந்தது. இப்போது திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் அந்த படம் ரிலீஸ் ஆவதிலேயே சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விஷால்
நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் படம், வரும் 26 ஆம் தேதி அதாவது நாளை வெள்ளிக்கிழமை இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஷால், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை டைரக்டர் ஹரி இயக்கி இருக்கிறார்.
இந்த படம் நாளை வெளியாகும் என்ற நிலையில், தமிழகத்தில் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இந்த படம் வெளியாவதில் இப்போது சிக்...