கடை திறப்பு விழாவில்.. கவர்ச்சி கடை போட்ட ஹனிரோஸ்..! தூக்கம் தொலைத்த இளசுகள்..!
சில நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்தாலும், அந்த படங்களில் நடித்த பிரபலத்தை வைத்து, வேறு விதமாக தங்களது வருமானம் ஈட்டும் வழியை கண்டுபிடித்து விடுவர். சினிமாவில் நடிக்காமலேயே அதைவிட பல மடங்கு வருமானம் ஈட்டும் திறமை என சில நடிகைகளுக்கு உண்டு.
ஹனிரோஸ்
தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை ஹனிரோஸ். இவர் டைரக்டர் வினையன் இயக்கிய பாய் பிரண்ட் என்ற படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் நடித்த போது அவருக்கு வயது 16.
அடுத்து ஈ வருஷம் காட்சிகள் என்ற படத்தில் நடித்தவர், தொடர்ந்து தமிழில் முதல் கனவே என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு ஆலயம், சவுண்ட் ஆப் பூட், சிங்கம் புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஹனிரோஸ், கேரள மாநிலம் மூலமட்டம் மாவட்டத்தை சேர்ந்தவர்.
சினிமாவில் மலையாளம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்தாலும் தம...