என்ன சொல்ட்றீங்க.. திரிஷாவை கல்யாணம் பண்ண வேண்டியவர்.. இப்போ இந்த நடிகையுடனா..?
தமிழ் சினிமாவில், சில நடிகைகள் மட்டும்தான் நீண்ட காலம் தாக்குபிடிக்க முடிகிறது. மற்றவர்கள் குறிப்பிட்ட காலத்தை கடக்க முடிவதில்லை. கவர்ச்சியாக நடித்தாலும் ஒரு கட்டத்துக்கு பிறகு அவர்களது இமேஜ் ரசிகர்கள் மத்தியில் நீடித்திருப்பதில்லை. ஆனால் சில நடிகைகள் மட்டுமே பல ஆண்டுகள் கடந்தும், சினிமாவில் கதாநாயகியாக நீடித்து வருகின்றனர்.
திரிஷா
நடிகை திரிஷா 20 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நீடித்து வருகிறார். இந்த காலகட்டத்தில் அவர் சந்திக்காத சர்ச்சைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, பல பிரச்சனைகள் சந்தித்து அதையெல்லாம் கடந்து வந்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
சாமி படத்தில் மாமியாக…
லேசா லேசா, மௌனம் பேசியதே போன்ற ஆரம்ப கால படங்களில், திரிஷா பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை ஆனால், ஹரி இயக்கத்தில் சாமி படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த பிறகு, மாமி திரிஷா என்று ரசிகர...