என்னால Bed லாம் Share பண்ண முடியாது.. நடிகை குட்டி பத்மினி ஓப்பன் டாக்…!
சினிமாவிலும் நடித்து, சீரியல்களிலும் பங்களிப்பை செய்துவரும சில நடிகைகள் இருக்கின்றனர். உதாரணமாக ராதிகா, குஷ்பு, குட்டி பத்மினி உள்ளிட்டோரை சொல்ல முடியும். வண்ணத்திரையை போலவே, சின்னத்திரையிலும் தனது பங்களிப்பை அளித்து வருபவர்களில் மிக முக்கியமானவர் குட்டி பத்மினி.
குட்டி பத்மினி
சமீபத்தில் ஒரு நேர்காணலில் குட்டி பத்மினி கூறியதாவது,
மூன்று மாத குழந்தையாக சினிமாவில் நடிக்க வந்த குழந்தை நான். குழந்தையும் தெய்வமும் படம் நடிக்கும்போது 8 வயது சிறுமியாக இருந்தேன்.
நான் நடித்த காலகட்டத்தில் கேரவன் வசதி எல்லாம் கிடையாது. எம்ஜிஆர் சிவாஜி எல்லோருமே மரத்தடியில்தான் இருப்பார்கள். படப்பிடிப்பு தளமே ஜாலியாக இருக்கும்.
துரோகங்களை, வலிகளை சந்தித்தவள்
நான் சினிமாவில் நிறைய துரோகங்களை வலிகளை சந்தித்து இருக்கிறேன். என் கணவருக்காக நிறைய விஷயங்களை விட்டுக் கொடுத்தேன். நிறைய விதங்களில் நான் நஷ்டங்களை சந...