மாஸ் நடிகருக்கு குவியும் ஹெட் நடிகர் ரசிகர்களின் ஆதரவு.. வச்சான் பாரு ஆப்பு.. பீதியில் வாரிசு
ஸ்டார் நடிகரை பல ஆண்டுகளாக அரசியலுக்குள் வருவார் என தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். எனக்கு கட்சியும் வேண்டாம், ஒரு கொடியும் வேண்டாம் என, ஸ்டார் நடிகர் கடைசியில் ஒதுங்கி விட்டார். இப்போது 73 வயதிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து கல்லா கட்டி வருகிறார்.
நாயகன் நடிகர்
அடுத்த, மய்யம் தலைவராக அரசியல் நடத்தி வரும் நாயகன் நடிகருக்கு, பெரியதாக மக்கள் மத்தியில் வரவேற்பே இல்லை. ஆளுங்கட்சி ஆதரவிலாவது ஒரு சீட் வாங்கி விடலாம் என அறிவாலயத்துக்கும் ஆழ்வார்பேட்டைக்கும் நடையோ நடை என நடக்கிறார். ஆனால் எதுவும் சொல்லிக்கிற மாதிரி இல்லை.
மாஸ் நடிகர்
இதற்கிடையே திடீரென அரசியல் கட்சி துவங்கிய மாஸ் நடிகர் அடுத்தடுத்து மாஸ் கிளப்பி வருகிறார். 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தல்தான் எங்கள் இலக்கு என, முதல் அறிவிப்பிலேயே தங்களது அதிரடி ஆட்டத்தை துவங்கிய மாஸ் நடிகர், அடுத்து மதுரையில் மாநாடு நடத்தவும் ஆயத்தமாகி வரு...