“நிறைய கடன் இருக்கு.. ஆனா.. இதுக்கு சம்மதிச்சது கிடையாது..” ஆல்யா மானசா சொன்னதை கேட்டீங்களா..?
டிவி சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. விஜய் டிவியில் ராஜா ராணி தொடரில் நடித்து, மக்களின் மனதில் இடம்பிடித்தார். இப்போது சன் டிவியில் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார்.
ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவ். இவரும் சீரியல் நடிகர்தான். ராஜா ராணி சீரியலில் சஞ்சீவ், ஆல்யா மானசா இருவரும் ஒன்றாக நடித்த போது ஏற்பட்ட நட்பு, ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. இருவரும் காதல் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
ஆல்யா மானசா
ஆல்யா மானசா போல, நீங்கள் நிறைய சம்பாதிக்க வேண்டுமா, அப்படி என்றால் இந்த லிங்க் ஐ கிளிக் செய்து உள்ளே சென்று பாருங்கள் என்று, அவரது பெயரை பயன்படுத்தி, மோசடி கும்பல் ஒன்று சமீபத்தில் ஒரு வதந்தியை பரப்பி வருகிறது.
இதுகுறித்து அறிந்த நடிகை ஆல்யா மானசா சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதுபற்றி அவரிடம் விசாரித்த போது நடந்த...