சிம்பு தெரியும்..? பழைய சிம்புவை பத்தி தெரியுமா..? STR 50 மாஸ் அப்டேட்..!
திரையுலக அஷ்டவதானி என்ற பட்டத்துக்கு சொந்தக்காரர் டி ராஜேந்தர். புலிக்கு பிறகு புலிதான் என்பதை நிரூபிக்கும் விதமாக லிட்டில் சூப்பர் ஸ்டாராக களத்தில் இறங்கியவர் அவரது மகன் சிம்பு என்கிற சிலம்பரசன்.
கடந்த 1980களில், டி ராஜேந்தர் படம் என்றால், தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் திருவிழா போல காணப்படும். காதல், குடும்பம், பாசம், ஆக்சன், சங்கீதம் என தனது படங்களை சிறந்த படைப்பாக தந்தவர் டி. ராஜேந்தர்
கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை டைரக்சன் தயாரிப்பு என சகலவிதங்களிலும் ரவுண்டு கட்டி அடித்து, வெற்றி மாலைகளை பெற்றவர் டி ராஜேந்தர்.
அவரது உறவை காத்த கிளி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் டிஆரின் பல படங்களில் கலக்கிய சிலம்பரசன், 1999ம் ஆண்டில் மோனிஷா என் மோனலிஷா என்ற படத்தில் வாலிபராக காட்சியளித்தார்.
அடுத்து தொட்டி ஜெயா, சரவணா, மன்மதன், தம், காதல் அழிவதில்லை, வந்தா ராஜாவ தான் வருனே், ப...