50 வயசு.. ஆனா இன்னும் அந்த ஆசை இருக்கு.. வெளிப்படையாக சொன்ன நக்மா..!
தமிழ் திரையுலகில் 1993 முதல் 1997ஃ-க்கு இடைப்பட்ட காலத்தில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து தமிழில் இருக்கும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த நடிகை நக்மா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.
நந்திதா மொரார்ஜி என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை நக்மா ஹிந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் ஆரம்பத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் இதனை அடுத்து தென்னிந்திய படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
50 வயசு ஆனா..
தற்போது 50 வயதை தொட்டிருக்கும் நடிகை நக்மா மராட்டி, தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்றவர். இதனை அடுத்து இவர் ஹிந்தி, தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி போன்ற மொழி படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்டவர்.
தமிழைப் பொறுத்த வரை இவர் ரஜினிகாந்த் ஒரு இணைந்து நடித்த பாட்...