இதனால் விஜய்யை பளார் என அறைந்தேன்.. ரகசியம் உடைத்த நடிகை சங்கவி..!
இன்று தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத சிம்மாசனத்தை போட்டு அமர்ந்திருக்கும் தளபதி விஜய் ஆரம்ப காலத்தில் நடிக்கும் போது பல்வேறு வகையான சருக்கல்களை சந்தித்தவர். அந்த சமயத்தில் இவரோடு அதிக அளவு படங்களில் ஜோடி போட்ட நடிகை சங்கவி பற்றி உங்கள் நினைவில் இருக்கலாம்.
இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களில் இருவருது கெமிஸ்ட்ரியும் வெகுவாக ஒர்க் அவுட் ஆன நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்களோ? என்று கேட்கக் கூடிய வகையில் நெருக்கமான காட்சிகளில் படு ஜோராக நடித்திருப்பார்கள்.
விஜய் - சங்கவி..
அந்த வகையில் தளபதி விஜய் மற்றும் சங்கவி கோயமுத்தூர் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் படு நெருக்கமாக நடித்ததை அடுத்து ரசிகர்கள் பல வகைகளில் இவர்களைப் பற்றி கிசுகிசுத்து வந்தார்கள்.
நடிகை சங்கவியும் தமிழில் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனை அடுத்து இவர் நாட்டாமை, கட்டுமர...