3 பெண்களுடன் டேட்டிங்.. லீக்கான நடிகர் விஷாலின் அலப்பறைகள்..
ஆந்திராவை சேர்ந்த நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகராக வளர்ந்து வந்தார். இவருடைய அப்பா ஜி.கே ரெட்டி ஒரு மிகச்சிறந்த தயாரிப்பாளராக இருந்த காரணத்தால் திரையுலகப் பிரவேசம் எளிதாக இவருக்கு கிடைத்தது.
தமிழ் திரையுலகில் "செல்லமே" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்னர் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களை தயாரிக்க விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை ஏற்படுத்தினார்.
ஆரம்ப காலத்தில் ஆக்சன் கிங் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்த இவர் செல்லமே படத்தில் நடித்த பிறகு சண்டைக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற படங்களில் நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதனை அடுத்து வெளி வந்த படங்கள் இவருக்கு போதிய அளவு வெற்றியை தராத காரணத்தால் தனது தயாரிப்பு நிறுவனத்தில் சில படங்களை தயா...