Uncategorized
ஒருவேளை “அதை” விரும்ப ஆரம்பிசுட்டேன் போல இருக்கு..! – சொக்க வைக்கும் அழகில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!
தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய மொழிகளில் தனக்கு என்று ஒரு ரசிகர்கள் படையை உருவாக்கி விட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) ஒரு வாரிசு நடிகை.
இவரின் அம்மா மலையாள திரை உலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர். அந்த வகையில் தற்போது இவரது மகளான கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாநாயகியாக திகழ வேண்டும் என்று முழுமூச்சாக செயல்பட்டு வருகிறார்.
இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் இவரது நடிப்பை பறைசாற்றும் விதத்தில் அமைந்திருந்தது. குறிப்பாக நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டையும் பெற்றுவிட்டார்.
தமிழில் இவர் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் தமிழில் முன்னணி கதாநாயகராக திகழும் இளைய தளபதி விஜய், சீயான் விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர...