Uncategorized
“பார்ரா.. SK-வுக்கு 21.. KH-க்கு 51..” – என்ன விஷயம்ன்னு பாருங்க..!
சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறியவர். துவக்கத்தில், விஜய் டிவியில் அது இது எது என்ற நிகழ்ச்சியில் ஆங்கராக பணிபுரிந்த சிவகார்த்திகேயன், இயக்குநர் பாண்டியராஜன் இயக்கத்தில் மெரினா படம் மூலம், தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
இதில், ஓவியா தான் கதாநாயகி. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகரானார்.
அதன்பின் மனம்கொத்தி பறவை, சீமராஜா, காக்கிச்சட்டை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஹீரோ, ரெமோ, மான் கராத்தே, பிரின்ஸ், டாக்டர், வேலைக்காரன், நம்ம வீட்டுப்பிள்ளை, கனா கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இதில், சில படங்கள் மெகா ஹிட் படங்களாக அமைந்தன. இதனால், மிக விரைவிலேயே முன்னணி நாயகனாக சிவகார்த்திகேயன் முன்னிலைக்கு வந்தார்.
இப்போது மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பின்பு, உலகநாயகன...