Uncategorized
முன்னணி நடிகையாக வரும் ஆசையில்.. கிளாமர் ராணி-யாக மாறிய நீலிமா ராணி..!
நீலிமா ராணி,(Neelima Rani) டிவி சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். சினிமாவிலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். கடந்த1983ம் ஆண்டில் பிறந்த நீலிமா ராணி, சினிமா மற்றும் சீரியல் இரண்டிலும் பெயர் சொல்லும்படியான ஒரு நல்ல நடிகையாக கலைத்துறையில் வலம் வருகிறார்.
கடந்த 1992ம் ஆண்டில் வெளிவந்த தேவர் மகன் படத்தில், சிவாஜியுடன் விளையாடும், பாடும் குழந்தைகளில் நீலிமா ராணியும் ஒருவர். 30 வயதுகளை கடந்த நீலிமா, சென்னையை சேர்ந்தவர். இதுவரை 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நீலிமா நடித்திருக்கிறார். அதே போல், இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.
கார்த்தி – காஜல் அகர்வால் நடித்த நான் மகான் அல்ல படத்தில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகை விருது பெற்றவர் நீலிமா. அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களில், இவரது நடிப்பு கவனிக்கும் விதமாக இருந்தது...