Uncategorized
மீன் வலையை ஆடையாக்கி, தோளில் சுமந்து கடல் கன்னி கஜோல்…
தமிழில், 2 படங்களில் மட்டுமே நடித்தவர் நடிகை கஜோல்( Kajol)பாலிவுட்டைச் சேர்ந்தவர். கடந்த 1998ல் தமிழில் மின்சார கனவு படத்தில், பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஒரு வித்யாசமான காதல் கதை இது. இந்த படத்தில் இடம்பெற்ற தங்கத்தாமரை மகளே பாடல், தமிழ் சினிமா பாடல்களில் இன்றும் டாப் பாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த பாடல் பாடியதற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், சிறந்த பாடகர் தேசிய விருது பெற்றார்.
இதையடுத்து, தமிழில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில், கஜோல் மிகப்பெரிய தொழிலதிபராக, நடித்திருந்தார். அந்த படத்திலும், இவரது நடிப்பு பாராட்டை பெற்றது. ஆனால், தனுஷூடன் மோதும் காட்சிகளில், அக்கா – தம்பி சண்டை போல் இருந்ததாக, ரசிகர்கள் கிண்டலடித்தனர்.மராத்திய மொழி பேசும் கஜோல், பிரபல இந்தி நடிகை. இந்தி நட்சத்திர நடிகர் அஜய் தேவ்கன் தான் இவரது கணவர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனிஷா என்ற...