Uncategorized
“உங்க பார்வை திறன் அதிகரிக்கணுமா..!” – அதுக்கு சிம்பிளான இந்த யோகா போதும்..!
யோகா கலையின் மூலம் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. மன அழுத்தத்தை குறைத்து மன நிம்மதியை அளிக்கக்கூடிய இந்த யோகா கலையை யோகிகள் நமக்கு விட்டுச் சென்று இருக்கிறார்கள். அப்படிப்பட்ட யோகாவை நீங்கள் செய்வதின் மூலம் உங்கள் கண் பார்வை திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.
மேலும் இந்தப் பார்வை திறனை அதிகரிக்க கூடிய யோகா என்னென்ன அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
கண் பார்வை திறனை அதிகரிக்க கூடிய யோகா
இன்று இருக்கும் இளம் தலைமுறை அதிக அளவில் லேப்டாப் மற்றும் தொலைபேசிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் இவர்களின் கண் பயன்பாடு அதிகரித்து இருப்பதால் கண் சம்பந்தப்பட்ட வியாதிகளும் பெருகி உள்ளது. எனவே உங்கள் கண் பார்வையை அதிகரிக்க எளிமையான சில யோகாக்களை செய்யலாம்.
அந்த வகையில் உற்று நோக்குதல் எனும் பயிற்சியை நீங்கள் செய்வதின் மூலம் உங்கள் பார்வை திறன் அதிகரித்து ஒ...