Uncategorized
நவரச நாயகன் கார்த்திக் மகன் இப்படிப்பட்டவரா?’ – காமெடி நடிகர் புகழ் சொன்ன ஆச்சரிய தகவல்
சினிமாவில் காமெடி நடிகராக வளர்ந்து வருகிறார் புகழ். விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். இவரது காமெடி சேட்டைகள், சினிமா வாய்ப்பை பெற்றுத் தந்தது.
அயோத்தி. வலிமை, யானை, டான், எதற்கும் துணிந்தவன், வீட்ல விசேஷம், சபாபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். வரும் 7ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள ஆகஸ்ட் 16, 1947 படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில், நடிகர் புகழ் பேசுகையில்,
இந்த படத்தில், எனக்கு முக்கிய ரோல் தந்த, இயக்குநர் பொன்குமாருக்கு நன்றி. இந்த படம், என் வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும். எனக்கு காமெடியே வராதா, என சிலர் என்னை கிண்டலாக பேசி இருக்கின்றனர்.
இந்த படத்தில், முக்கிய காட்சிகளில் சிரித்து, உடன் நடித்த மற்றவர்களை சிரிக்க வைத்துவிடக் கூடாது என கவனமாக இருந்தேன்.ஏனென்றால், ...