Uncategorized
“திங்கட்கிழமை ஏற்படும் சோமவார பிரதோஷம்..!” – சிறப்புக்கள் என்னென்ன பாக்கலாமா?
சிவனுக்கு உரிய பிரதோஷ காலத்தில் நந்தி பகவானுக்கும் சிவபெருமானுக்கும் எண்ணற்ற அபிஷேக ஆராதனைகளை நடத்தி மக்கள் தங்கள் குறைகளை கூறி தெய்வத்திடம் வேண்டுதல்களை வைப்பார்கள். அது மட்டுமல்லாமல் இந்த தினத்தில் நந்தி பகவான் காதில் நடக்க வேண்டியதை கூறி அதை நடத்தித் தருமாறு பக்தர்கள் கோரிக்கை வைப்பது வழக்கம்.
அதிலும் சனி பிரதோஷம் மற்றும் திங்கட்கிழமை வரக்கூடிய பிரதோஷத்திற்கு சிறப்பான பலன்கள் உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.
எனவே இந்தக் கட்டுரையில் திங்கட்கிழமை அதாவது சோமவார பிரதோஷத்தில் நாம் பூஜையில் கலந்து கொள்வதோடு அந்த சோமவாரத பிரதோஷத்திற்கு உள்ள சிறப்புகள் என்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சோமவார பிரதோஷத்தின் சிறப்புகள்
சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் சோமவார பிரதோஷத்தன்று சிவனை தரிசித்து வழிபடுவதன் மூலம் சந்திர தோஷம் உங்களுக்கு நீங்கும்.
மேலும் ஆயிரம் பிரதோஷங்களுக...