Uncategorized
‘முதல்வர் மகனும் நடிக்கலாம், வீரப்பன் மகளும் நடிக்கலாம்’ – சினிமா குறித்து, கிண்டலாக பேசிய இயக்குநர் பேரரசு
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பேரரசு. இவர் பல வெற்றிப்படங்களை தந்திருக்கிறார்.
விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி, அஜீத் நடித்த திருப்பதி மற்றும் திருத்தணி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இதில், சில படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
கே.என்.ஆர் ராஜன் என்பவர் தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் மாவீரன் பிள்ளை என்ற படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவியும் நடிக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
விழாவில் பங்கேற்று பேசிய இயக்குநர் பேரரசு, ஒரு படத்தை பார்க்கும்போது அதில் ஹீரோ, ஹீரோயின் யார் என பார்க்கக்கூடாது. படத்தின் கதை என்ன, கருத்து என்னவென்றுதான் பார்க்க வேண்டும்.
சினிமாவில் முதல்வர் மகனும் நடிக்கலாம்; வீரப்பன் மகளும் நடிக்கலாம். சினிமா யார் நடித...