Uncategorized
அனுபமா பரமேஸ்வரன் குழந்தை புகைப்படத்தை பார்த்து இருக்கிறீர்களா !
தமிழிலும் மலையாளத்திலும் நன்கு அறியப்பட்ட நடிகையான அனுபமா பரமேஸ்வரன் அவர்கள் கேரள மாநிலம் திருச்சூருக்கு அருகில் இருஞ்சால குடை என்ற கிராமத்தில் 1996 பிப்ரவரி 20ஆம் தேதி பிறந்தவராவார். இவருக்கு மாலு என்ற மற்றொரு துணை பெயரும் உள்ளது. இவருக்கு பரமேஸ்வரன் என்ற தந்தையும் சுனிதா பரமேஸ்வரன் என்ற தாயும் அக்ஷய் பரமேஸ்வரன் என்ற சகோதரரும் உள்ளனர்.
அனுபமா பரமேஸ்வரன் அவர்கள் 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகில் மிகப்பெரிய புகழை அடைந்தார். இந்த திரைப்படம் பலருக்கும் திருப்புமுனையாக இருந்தது.
இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக நடித்திருந்த நிவின் பவுலி அவர்களுக்கு இந்த திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய மார்க்கெட்டை தந்தது எனலாம். ஏனெனில் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இந்த திரைப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படம் மலையாள மொழியில் மட்ட...