Uncategorized
“முகத்தை ஜொலி ஜொலிக்க வைக்கும் சில முக்கிய ஃபேஸ் பேக்..!” – நீங்களும் யூஸ் பண்ணலாம்..!
என்ன விலை அழகே உன்னை விலைக்கு வாங்க வரவா… என்ற பாடல் வரிகள் அனைவருக்கும் நினைவில் இருக்கும். அழகு என்பதை ஒவ்வொரு பெண்களும் விரும்புகிறார்கள். அதிலும் முக அழகை பராமரிப்பது அவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியை என்றுமே கைவிட்டதில்லை.
இவர்கள் 60 இலிருந்து 80 வரை முக அழகை பேணுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட முக அழகை பேணுவதற்கு உரிய சில முக்கிய ஃபேஸ் பேக் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
முக அழகை பராமரிக்க உதவும் ஃபேஸ் பேக்
1.மஞ்சள், வெள்ளரி பேஸ் பேக்
மருத்துவ குணம் நிறைந்திருக்கும் மஞ்சளில் அதிக அளவு ஆன்ட்டி செப்டிக் துகள்கள் உள்ளது. இது சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து நம்மை பாதுகாக்க உதவி செய்கிறது. அது போல் வெள்ளரிக்காயும் மிகச்சிறந்த நீர்ச்சத்து கொண்ட ஒரு காய். இந்த நீர் சத்தானது உடலின் ஈரப்பதத்தை பேணுவதற்கு உதவி செய்கிறது. வெள்ளரிக்காயை அரைத...