Uncategorized
“ஜக்குபாய்” முதல் “வணங்கான்” வரை படப்பிடிப்பின் பாதியிலேயே விலகிய முன்னணி தமிழ் நடிகர்களின் படங்கள் !
தமிழ் சினிமாவில் இதுவரை பல படங்கள் பாதியிலேயே நின்றிருக்கிறது. அது மற்ற ஹீரோக்கள் நடித்து பெரும் ஹிட்டும் கொடுத்திருக்கிறது அந்த வகையில் இந்த பதிவில் நாம் முன்னணி ஹீரோக்கள் பாதியில் கைவிட்ட 5 படங்களை தான் பார்க்கப்போகிறோம்.
ஜக்குபாய்
ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்து 'ஜக்குபாய்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவுடன் தொடங்கியது. ஆனால் ரஜினிகாந்த் ஒரு சில பகுதிகளை படமாக்கிய பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டு படத்தில் இருந்து விலகினார். சரத்குமார் ரஜினிகாந்திற்குப் பதிலாக 'ஜக்குபாய்' படத்தின் முக்கிய கதாபாதிரத்த்தில் நடித்தார், நீண்ட காலமாக தாமதமான படம் 2010 இல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
உன்னை நினைத்து
'பூவே உனக்காக' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்குப் பிறகு விஜய், இயக்குனர் விக்ரமனுடன் மீண்டும் 'உன்னை நினைத்து' படத்தி...