Uncategorized
இஸ்லாமியராக நடிக்கும் ரஜினிகாந்த் பட்டையைக்கிளப்பபோகும் ஞானவேலின் ஸ்டோரி லைன்
தற்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார் அனிருத் இசையமைக்கிறார். ரஜினிகாந்த் ஜெய் பீம் படப் புகழ் ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கவிருக்கிறார் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
தா.சா ஞானவேல் சூர்யாவை வைத்து ஜெய்பீம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்த இந்த படம் OTT யில் தான் இறங்கியது இருந்தபோதிலும் இது நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு உண்மை சம்பவத்தை படமாக எடு எடுக்க இருக்கிறாராம் ஞானவேல்.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஒரு இஸ்லாமியராக நடிக்கிறாராம் மேலும் போலீஸ் நடத்தும் என்கவுண்டர் களுக்கு எதிராக போராடும் மனிதராக நடிக்கிறாராம். ரஜினிகாந்த் மேலும் காவல் துறையில் நடக்கும் அத...