இந்த ஹீரோவுடன் காதலா..? முதன் முறையாக மௌனம் கலைத்த மீனா..! என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!
தென் இந்திய சினிமாவில் பிரபல நடிகையான மீனா 90ஸ் காலகட்டத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருந்தார்.
ஹீரோயின் ஆக வருவதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முதன் முதலில் சிவாஜி கணேசன் நெஞ்சங்கள் திரைப்படத்தின் மூலமாக இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார் .
மீனா:
அதை அடுத்து தமிழ் ,தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து பிரபலமான நடிகையாக இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.
இவரது நடிப்பில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களான அண்ணாத்த, அன்புள்ள ரஜினிகாந்த், வானத்தைப்போல, முத்து, மாயி ,பொற்காலம், கூலி , சிட்டிசன், எஜமான் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி, என் ராசாவின் மனசிலே உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித...