லியோ ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து த்ரிஷா வெளியிட்ட புகைப்படம்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் லியோ. இத்திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்கள் இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட் கும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் விஜய் தவிர இன்னும் பல நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள் முக்கியமாக வில்லன்களாக பிரபல இயக்குனர் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

 

இந்தப் படம் எல் சி யு என சொல்லப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் அடங்கும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் ஏற்கனவே லோகேஷ் இயக்கிய கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரும் ஹிட்டடித்தது .

தற்பொழுது இல்லியோ படம் காஷ்மீரில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நாயகியாக திரிஷா நடிக்கிறார் இவர் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜயுடன் இணைந்து நடிக்கிறார்.

காஷ்மீரில் தற்போது நிலவி வரும் கடும் குளிரிலும் இந்தப் படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் திரிஷா தற்பொழுது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார் .

ஆனால் இவர் பகிர்ந்து வரும் புகைப்படங்களில் படக்குழுவினர்கள் யாருமே இல்லை தனியாக அல்லது அவர்களுடைய நண்பர்களுடனோ எடுத்த புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து வருகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் திரிஷா தங்கியிருக்கும் ரூமிற்கு வெளியே ஜன்னலருகில் குரங்குகள் நிற்பதும், அதற்கு திரிஷா பழங்களை கொடுக்கும் காட்சியும் புகைப்படமாக எடுத்து தன்னுடைய சோசியல் மீடியா அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார்.

இதை  ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் இன்று சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. அதில் விஜய் இதுவரை இல்லாத ஒரு வித்தியாசமான தோற்றத்தில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் காணப்படுகிறார்.

அவருடன் சஞ்சய் தத்தும் இருக்கிறார் இந்த புகைப்படங்களை இணையதளத்தில் இன்று வைரலாக பரவி வருகிறது. இதுபோல பல சுவாரசியமான சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …

Exit mobile version