ANTI BIKILI : “பட்டையை கிளப்பும் பிச்சைக்காரன் 2..!” – எகிறிய எதிர்பார்ப்பு..!

வரும் மே 19ஆம் தேதி திரையரங்குகளுக்கு வெளிவர இருக்கக்கூடிய பிச்சைக்காரன் 2 ( Pichaikkaran 2 ) திரைப்படத்தின் அட்டகாசமான டிரைவர் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை விஜய் ஆண்டனி இயக்கியிருப்பதோடு மட்டுமல்லாமல் இதில் அவர் நடித்தும் இருக்கிறார்.

ஏற்கனவே பிச்சைக்காரன் ஒன்று திரைப்படம் மிகவும் நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றதை அடுத்து சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த இந்த பிச்சைக்காரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று தந்தது.

Pichaikkaran 2

மேலும் விஜய் ஆண்டனிக்கு திரைப்படப் பயணத்தில் ஒரு மையில் கல்லாக இருந்த எந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி அதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு இயக்கியும் இருக்கிறார்.

இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை பெறுவாரியாக ஈர்த்துள்ளது. தனது அட்டகாசமான நடிப்புத் திறனை மட்டுமல்லாமல் இயக்கும் திறனை இதில் விஜய் ஆண்டனி வெளிப்படுத்தி இருக்கிறார்.

எனவே விரைவில் வெளிவரக்கூடிய எந்த திரைப்படத்தை திரையரங்குகளில் பார்ப்பதற்கு ரசிகர்கள் தயாராகி விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.

Pichaikkaran 2

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது அனைவருக்கும் நன்றாக தெரியும். அதிலிருந்து மீண்டு வந்து படத்தை தரமான முறையில் முடித்திருக்கும் இவரது படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று அனைவரும் கூறியிருக்கிறார்கள்.

அதற்கு ஏற்ற வகையில் இந்த படத்தின் டிரைலர் மாஸாக உள்ளதை என்று திரை உலக வட்டாரங்கள் கூறியுள்ளது. எனவே இந்த திரைப்படத்தில் இசை மட்டுமல்லாமல் விஜய் ஆண்டனி நடிக்கும் பக்காவாக இருக்கும் என்றும் பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

Pichaikkaran 2

விஜய் ஆண்டனியின் ரசிகர்களுக்கு என்று விருந்து கொடுக்கக் கூடிய அளவு இந்த பிச்சைக்காரன் 2 படம் இருக்குமா? இல்லை ட்ரெய்லரில் மட்டும் சிறப்பாக தன்னை வெளிப்படுத்தி திரைப்பட நகர்த்தலில் கோட்டை விடுமா என்பது படம் வெளிவந்த பிறகு தான் நமக்குத் தெரியவரும்.

எனவே வரும் மே 19ஆம் தேதி வரை காத்திருந்தால் பிச்சைக்காரன் 2 சக்சஸ் ஆன படமா அல்லது சர்ப்ரைஸ் இல்லாத படமா என்பது எளிதில் தெரிந்துவிடும்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version