தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரை விஜய் அறிவித்தது முதலே விஜய்க்கு என்று ஒரு எதிர்பார்ப்பு என்பது மக்கள் மத்தியில் அதிகரிக்க துவங்கியிருக்கிறது. பொதுவாக சினிமா நடிகர்கள் மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பது சாதாரண விஷயம் தான்.
ஏனெனில் ஏற்கனவே மக்கள் மத்தியில் அவர்கள் பிரபலமாக இருப்பதனால் அவர்கள் அரசியலுக்கு வந்தால் ஏதாவது சாதிப்பார்கள் என்று மக்கள் நினைக்கின்றனர். மேலும் இரண்டு முக்கிய கட்சிகள் மட்டுமே வெகு காலங்களாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருவதால் ஒரு புதிய கட்சி வந்தால் நன்றாக இருக்கும் என்றும் ஒரு பக்கம் ஆவல் இருந்து வருகிறது.
விஜய்யின் கட்சி:
இந்த நிலையில் அந்த ஆவலை விஜய் பூர்த்தி செய்வாரா என்பதும் கேள்வியாக இருந்து வருகிறது. கட்சி துவங்கியது முதலே பொறுப்பான சில வேலைகளை விஜய் செய்து வந்தார். அந்த வகையில் தென் தமிழ்நாட்டில் அதிக மழை வெள்ளம் ஏற்பட்ட பொழுது அங்கு சென்று அங்கு இருந்த மக்களுக்கு பேரிடர் உதவிகள் மற்றும் நன்கொடைகளை வழங்கி வந்தார் விஜய்.
இப்படி இன்னும் நிறைய செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இவரது கட்சி கொள்கைகள் குறித்த எந்த ஒரு தகவல்களும் வெளிவரவில்லை. ஆனால் கட்சியின் கொடியை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் விஜய்.
எடப்பாடி பழனிச்சாமியின் புது அறிவிப்பு
மேலும் அதற்கு கட்சி கொடி பாடல் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். அதில் மூன்றெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒழிக்குது என்கிற ஒரு வசனத்தை வைத்திருந்தார். அதன்படி மூன்றெழுத்து மந்திரம் அவருக்கு என்று அவர் குறிப்பிட்டது மக்கள் திலகம் எம்ஜிஆர் தான்.
எம்.ஜி.ஆர்க்கு பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறேன் என்று விஜய் கூறுவதாகவே அதை பலரும் எடுத்துக் கொண்டனர். இந்த நிலையில் இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் அதிமுக பேசியிருப்பது சமீபத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கூட்டணி பத்தி முடிவு எடுக்கப்படும்
அதிமுகவின் தலைவரான எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் இது குறித்து பேசி இருக்கிறார் அதில் அவர் கூறும்பொழுது அ.தி.மு.க தலைவர்களை விஜய் பயன்படுத்துவது மிகவும் பெருமையாக உள்ளது. அதிமுக தலைவர்களை பயன்படுத்தினால்தான் அரசியல் செய்ய முடியும் என்பதை அனைவரும் தெரிந்து வைத்திருக்கின்றனர்.
தேர்தல் நேரத்தில் தவேக அதிமுக கூட்டணி குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. எனவே அதிமுகவுடன் விஜய் கூட்டணி போடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? என்று இப்பொழுது பேச்சுக்கள் துவங்கியிருக்கின்றன.