நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் பல்வேறு விமர்சனங்களை பெற்று தடுமாறியது. இருந்தாலும் கூட படத்தின் வசூல் எந்த அளவிலும் பாதிக்கவில்லை.
காரணம் லியோ படத்திற்கு போட்டியாக எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் வெளியாகவில்லை. அதனால் தனிக்காட்டு ராஜாவாக வசூல் வேட்டை ஆடினார் நடிகர் விஜய்.
தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாதியை போலியானது என்றும், மன்சூர் அலிகான் சொன்ன கதை அவருடைய பார்வையில் இருந்து கூறப்பட்ட கதை. உண்மை கதை வேற ஒன்றாக கூட இருக்கலாம்..? என்றெல்லாம் படத்தின் இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குனர் ரத்தினகுமார் ஆகியோர் படம் வெளியான பிறகு பேட்டிகளில் பேசியிருந்தனர்.
லியோ 2
எனவே லியோ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். அந்த வகையில் லியோ படத்தின் வெற்றி விழாவின் பொழுது நடிகை திரிஷா பேசி முடித்த பிறகு அப்படி போடு அப்படி போடு பாடலில் நடிகர் விஜய் திரிஷா பார்த்தது போல லியோ இரண்டாம் பாகத்திலும் அப்படி ஒரு பாடலை வைக்க வேண்டும் என்று தொகுப்பாளர் லோகேஷ் கனகராஜிடம் கோரிக்கை வைத்தார்.
இதற்கு லோகேஷ் கனகராஜும் கண்டிப்பாக வைத்துவிடலாம் என்பது போல சைகை காட்டினார். அப்போது, லோகேஷ் கனகராஜை மெல்லமாக திரும்பி பார்த்த நடிகர் விஜய் அதெல்லாம் வாய்ப்பே இல்லை என்பது போல கையேசைத்தார்.
அப்போது, லோகேஷ் கனகராஜ் படத்தில் ஹீரோவுக்கு குத்து பாடலா..? அதெல்லாம் வாய்ப்பே இல்லை என்பதால் தான் இப்படி கையை அசைக்கிறார் என்று பலரும் நினைத்தார்கள்.
நான் கடையை சாத்திட்டேன்
ஆனால், லியோ 2 படமே வரப்போவது கிடையாது.. நான் கடையை சாத்திட்டேன்.. பொது வாழ்க்கைக்குள் நுழையப் போகிறேன்.. என்பதைத்தான் மறைமுகமாக அன்றே அதெல்லாம் முடியாது என்று சொல்லி இருக்கிறார் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து அப்போ புரியல.. இப்போ புரியுது என்று மன்மதன் சிம்புவின் மீம் டெம்ப்ளேட்டை கொண்டு இந்த வீடியோவை இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர் ரசிகர்கள்.