நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலுக்கு வந்தது குறித்து பல்வேறு நடிகர்கள் அரசியல் தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல சீரியல் நடிகர் போஸ் வெங்கட் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால்.. என்ன நடக்கும்..? என்று மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருக்கிறார். அவருடைய பேச்சு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
அவர் கூறியதாவது, நடிகர்கள் கட்சி தொடங்கினால் முதலமைச்சராக முடியும் என்பது கனவான ஒரு விஷயம். நடிகர் விஜயகாந்த் கட்சி தொடங்கினார் நடிகர் கமலஹாசன் கட்சி தொடங்கினார் அவர்களுடைய முகத்திற்காக அவர்களுடைய கவர்ச்சிக்காக அவர்கள் நிற்கும் தொகுதியில் அவர்களால் வெற்றி பெற முடியும்.
தவிர 234 தொகுதிகளிலும் அவர்களால் வெற்றி பெற முடியாது. அதுபோல தான் நடிகர் விஜய் போல் விஜய் அவர் இருக்கக்கூடிய தொகுதியில் வெற்றி பெறுவார். ஆனால், 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவாரா..? என்றால் சந்தேகமான விஷயம் தான்..
அதிகபட்சமாக அவருக்கு ஆறு சதவீதம் அல்லது பத்து சதவீதம் வாக்குகள் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், முதலமைச்சராக முடியுமா..? என்ற கேள்வி இருக்கிறது. ரசிகர் மன்றங்கள் இருக்கக்கூடிய அனைத்து நடிகர்களும் முதலமைச்சராக முடியுமா..? அப்படி பார்த்தால் அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு என்ன ரசிகர் மன்றம் இருந்தது..? அவர் முதலமைச்சர் ஆகவில்லையா..?
அவர் ஏற்கனவே இருந்த ஒரு கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டார். அதன் மூலம் முதலமைச்சரானார் ஆனார்.
ஆனால், புதிதாக ஒருவர் தன்னுடைய ரசிகர் மன்றத்தை கட்சியாக தொடங்கி அதன் மூலம் முதலமைச்சராக முடியும் என்றால் தமிழக அரசியல் வரலாற்றில் அப்படி எதுவும் நடந்தது கிடையாது.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் குறிப்பிட்ட அரசியல் கட்சியில் பயணித்து. அதன் பிறகு அதிலிருந்து பிரிந்து தனக்கான கூட்டத்தை உருவாக்கினார். ஆனால் நடிகர் விஜய் புதிதாக அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறி தான் என பேசி இருக்கிறார் அவருடைய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.