மாநாட்டுக்கு விஜய் மனைவி ஏன் வரல..? விஜய் மாநாட்டுக்கு பணம் கொடுத்த திமுக மூத்த அமைச்சர்கள்..!

நடிகர் விஜய் தொடங்கி இருக்கக்கூடிய தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு கடந்த 27ஆம் தேதி நடந்து முடிந்தது.

இதில் நடிகர் விஜயின் பேச்சு பெரும்பாலான பொது மக்களிடம் சென்றடைந்து இருக்கிறது. பலரும் நடிகர் விஜய்க்கு ஆதரவாக மனநிலைக்கு நகர்ந்திருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது.

இதனால் எதிர்க்கட்சிகள் பலவும் விஜயின் மாநாடு குறித்து எதிர்மறையான அறிக்கைகளை வெளியிட்டு கதறி வருகிறார்கள். அந்த அளவுக்கு விஜயின் மாநாடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க… இந்த மாநாட்டின் மீது பல்வேறு விமர்சனங்களும் வைக்கப்படுகிறது. அந்த வகையில் திருச்சி சிவா அவர்களின் மகனும் அரசியல் பிரமுகமான திருச்சி சூர்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயின் மாநாடு குறித்து பல்வேறு விஷயங்களை பேசி இருக்கிறார்.

இதில் கூறியுள்ள அவருடைய கருத்துக்கள் அனைத்துமே அவருடைய சொந்த கருத்துக்கள். இதற்கும் நம்முடைய தமிழகம் தளத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்ற பொறுப்பு துறப்புடன் அவர் என்ன கூறினார் என்பதை இங்கே பார்க்கலாம்.

திருச்சி சூர்யா பேசியதாவது, நடிகர் விஜய் மாநாட்டில் பேசியது அனைத்துமே முன்பே ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்க்ரிப்ட். அந்த ஸ்க்ரிப்ட்டில் திட்டமிட்டபடி நடிகர் விஜய் பேசி முடிக்கவில்லை.

கிட்டத்தட்ட 2:30 மணி நேரம் அவர் பேசுவது போன்ற ஸ்க்ரிப்ட் அவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நடிகர் விஜய் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகத்தான் பேசினார்.

ஒன்றரை மணி நேரம் பேச வேண்டிய விஷயத்தை பேசாமலேயே விட்டுவிட்டார். பேசிய ஒரு மணி நேர பேச்சிலும் கூட நிறைய இடங்களில் பேச்சை முடிப்பது போல பேசிவிட்டு ஒரு நிமிடம் இருங்கள். இன்னொரு விஷயம் சொல்ல வேண்டி இருக்கிறது.. சாரி சாரி இன்னும் கொஞ்ச நேரம் இருங்கள்.. இன்னொரு விஷயம் சொல்ல வேண்டியிருக்கிறது என எதையோ மனப்பாடம் செய்து மறந்துவிட்டதை போல மேடையில் பேசினார்.

இதெல்லாம் நான் தெளிவாக கவனித்தேன். மட்டுமில்லாமல் நடிகர் விஜய் இந்த மாநாட்டை நடத்துவதற்கு பல்வேறு கிறிஸ்தவ மிஷனரிகள் பெரிய அளவில் பணம் கொடுத்து இருக்கின்றன.

trichy-suriya's speech

மேலும், கே என் நேரு, சிவசங்கர், சக்கரபாணி போன்ற திமுகவின் மூத்த அமைச்சர்கள் பலரும் தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை நேரில் சந்தித்து பணம் கொடுத்திருக்கிறார்கள்.

திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லும் நடிகர் விஜய்.. அதிமுக பற்றி வாயே திறக்கவில்லையே. அதிமுகவில் இன்று இருக்கக்கூடிய பெரிய தலைவர்கள் அனைவர் மீதும் ஊழல் புகார் நிலுவையில் இருக்கிறது.

இதைப்பற்றி நடிகர் விஜய் ஏன் பேசவில்லை..? பெண்னுரிமை பற்றி பேசுகிறார் விஜய். மாநாட்டிற்கு விஜய் மனைவி என் வரவில்லை..? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார் சூரியா.

மேலும் நடிகர் விஜய்க்கு அரசியல் ஆலோசனை கொடுக்கும் அதே நிறுவனம் தான் ஜகன்மோகன் ரெட்டிக்கும் அரசியல் ஆலோசனை கொடுத்தது.

அந்த மாநாட்டில் நடிகர் விஜயின் அணிந்திருந்த உடை முதற்கொண்டு அனைத்துமே அந்த நிறுவனம் ஏற்பாடு செய்தது தான்.

மாநாட்டில் எப்படி பேச வேண்டும் என்று நடிகர் விஜய் தன்னுடைய வீட்டில் பலமுறை பயிற்சி எடுத்திருக்கிறார். அதை எல்லாம் முடித்த பிறகு தான் மேடையில் வந்து பேசியிருக்கிறார்.

jagan-mohan-reddy-vijay-compare

நீங்கள் ஜகன்மோகன் ரெட்டி நடத்திய முதல் மாநாட்டில் அவர் அணிந்திருந்த உடை மற்றும் அவருடைய தோரணை பேச்சு ஆகியவற்றை கவனித்தால் தெரிந்திருக்கும்.

நடிகர் விஜய் என்ன தோரணையில் என்ன உடை அணிந்து கொண்டு பேசினாரோ அதேபோலத்தான் அவரும் பேசி இருப்பார். ஒட்டுமொத்தமாக அது ஒரு படப்பிடிப்பு போல தான் நடந்து முடிந்திருக்கிறது நடிகர் விஜய்யின் மாநாடு.

பயிற்சி எடுத்து அதை அப்படியே வந்து இங்கு நடித்து இருக்கிறார் என பேசி இருக்கிறார் திருச்சி சூர்யா. இவருடைய அந்த பேட்டி தற்போது இணைய பக்கங்களில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

அந்த காணொளியை காண விரும்பினால் கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.

-நன்றி ஒன் இண்டியா

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam