இந்த Treatment-க்கு அமெரிக்கா போறது ஆபத்து..! முதல்வரை எச்சரிக்கும் பிரபல மருத்துவர்..!

பொதுவாகவே உடல் நலத்தில் பிரச்சனை ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு வெளிநாடுகளை நோக்கி படை எடுக்கக்கூடிய பிரபலங்கள் அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் தற்போது தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தன் உடல் இருக்கும் பிரச்சனை காரணமாக வெளிநாட்டுக்கு சிகிச்சை மேற்கொள்ள செல்கிறார்.

அப்படி என்ன முதல்வரின் உடலுக்கு ஆனது. நம் தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் உடலில் இருக்கும் பிரச்சனை தான் என்ன? அந்தப் பிரச்சனையை தீர்க்கக் கூடிய மருத்துவ வசதி நம் நாட்டில் இல்லையா? என்பது குறித்த மர்மத்தை தற்போது உடைத்து இருக்கிறார் டாக்டர் காந்த்ராஜ்.

இந்த ட்ரீட்மென்ட்க்கு அமெரிக்கா போறது ஆபத்து..

அண்மை பேட்டி ஒன்றில் டாக்டர் காந்தராஜ் பேசும் போது நம் நாட்டில் எல்லா வசதிகளும் இருக்கிறது என்றாலும் ஒரு பிரபலம் ஒரு மருத்துவமனை நாடிச் செல்லும் போது இயக்கச்சக்கமான தேவையில்லாத விமர்சனங்கள் வெளி வருவதை தவிர்ப்பதற்காகவே பலர் வெளிநாடுகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக செல்கிறார்கள் என்ற கருத்தை முதலில் முன் வைத்து இருக்கிறார்.

அதற்கு உதாரணமாக ஜெயலலிதா இறந்த பிறகு தான் அப்போலோவிலே கொண்டு சென்று அட்மிட் செய்தார்கள் என்பது போன்ற வதந்திகள் கிளம்பியதை அவர் சுட்டிக் காட்டியதோடு தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் உடலில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்ய அமெரிக்க நோக்கி செல்ல இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

மேலும் வில்லங்கமாக ஸ்டாலினின் பயணம் முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடிய நோக்கத்தில் கூட இருக்கலாம் அல்லவா? என்று பேசிய அவர் ஏன் மோடியை மட்டும் இது போன்று நீங்கள் பேச மாட்டீர்கள் என்ற கேள்வியையும் வைத்தார்.

அதுமட்டுமல்லாமல் அண்ணாத்துரைக்கு கேன்சர் வந்த போது அதற்கு உரிய அறுவை சிகிச்சையை சதாசிவம் என்ற மருத்துவர் தான் மேற்கொள்ள வேண்டியிருந்தது என்றாலும் அந்த சிகிச்சையை மேற்கொண்டால் அண்ணாவின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் அவர் அதை செய்ய மறுத்துவிட்டார்.

எனவே தான் பாதுகாப்பு கருதி இந்திரா காந்தி அவரை அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல உத்தரவிட்டார். அது போலவே எம்.ஜி.ஆருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்ட சமயத்தில் எங்கு சிகிச்சை அளிக்காமல் அமெரிக்கா எடுத்துச் செல்ல இந்திரா காந்தி ஒப்புதல் அளித்தார்.

மேலும் ஜெயலலிதா ஒருவரை தான் அமெரிக்கா அனுப்பாமல் இந்தியாவிலேயே வைத்து சிகிச்சை அளித்ததால் நிலைமை என்ன ஆனது சிந்தித்துப் பாருங்கள். மோடியை ஜெயலலிதா அம்மையார் பகைத்துக் கொண்டதால் அதுவும் மோடியா லேடியா என்ற வாக்குவாதம் பெருத்ததை அடுத்து அமெரிக்கா அழைத்துச் செல்ல ஒப்புக்கொள்ளவில்லை.

முதல்வரை எச்சரிக்கும் பிரபல மருத்துவர்..

அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு கருவிகள் தேவையான அளவு உள்ளதே தவிர அதை பயன்படுத்தக்கூடிய வல்லுனர்களோ, நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களோ இல்லை. எனவே அமெரிக்கா சென்று வைத்தியம் பார்ப்பது என்பது வீணான ஒன்று என்று கூறுகிறார்.

எனவே அடிப்படை பரிசோதனை செய்வதற்காக முதல்வர் அமெரிக்காவிற்கு சென்று அங்கு பரிசோதனைகளை மேற்கொண்டு சில சிகிச்சைகளை பெற்று வர வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர் காந்தராஜ் தெரிவித்திருக்கிறார்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையம் எங்கும் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் அடிக்கடி வெளிநாடுகளில் சென்று தனது உடல்நலத்தை செக் செய்து வரும் முதல்வர் நீண்ட காலம் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam