சினிமாவில் நடிக்கின்ற நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆன பிறகு அரசியலில் களம் இறங்கி ஆட்சியைப் பிடிப்பது ஒன்றும் தமிழகத்தில் புதிய விஷயம் அல்ல. அந்த வகையில் எம்ஜிஆர் முதல் கொண்டு ஜெயலலிதா வரை திரை உலகப் பிரபலங்கள் பலர் தமிழகத்தை ஆட்சி செய்து இருக்கிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது இளைஞர்களின் மத்தியில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் முன்னணி நடிகர் தளபதி விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து எதிர் கால தமிழகத்தின் சிஎம் ஆக வருவார் என்ற நம்பிக்கையை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறார்.
விஜய் அரசியல் பற்றி விமல்..
எதிர்வருகின்ற 2026-இல் தமிழகத்தில் நடக்கும் சட்ட சபை தேர்தலை எதிர் கொள்ளக் கூடிய வகையில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது என்று சொல்லலாம்.
இந்நிலையில் இவர் கட்சி இவர் கட்சி ஆரம்பித்ததை அடுத்து பல்வேறு விதமான கலவை ரீதியில் விமர்சனங்கள் வெளி வந்துள்ள நிலையில் தற்போது சினிமா துறையைச் சேர்ந்த நடிகர் விமல் விஜயின் அரசியல் பற்றி கூறிய கருத்தால் ரசிகர்கள் கொந்தளித்து இருக்கிறார்கள்.
இதற்கு என்ன காரணம் என்ன? எதனால் ரசிகர்கள் கொந்தளித்து இருக்கிறார்கள் என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
தளபதி விஜய் தனது கட்சிக்கு நிர்வாகிகளை நியமனம் செலுத்துவதில் கவனம் செலுத்தி வரக்கூடிய சூழ்நிலையில் கட்சியின் கொடி மற்றும் முதல் மாநாட்டை எங்கு நடத்துவது என்பதில் தீவிரமான ஆலோசனைகளை செய்து வருகிறார்.
மேலும் இவர்களது முதல் மாநாடு மதுரை அல்லது திருச்சியில் நடைபெற சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் சேலத்தில் மாநாடு நடத்த விஜய் தயாராகி விட்டதாக தகவல்கள் கசிந்து உள்ளது.
மேலும் நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் நீட் தேர்வு தேவையில்லாத ஒன்று என்று விஜய் கூறியதற்கு பாஜகவினர் கடுமையான விமர்சனம் செய்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விபத்தால் மாநில அரசு தோல்வி அடைந்து விட்டது எனக் கூறி திமுகவிற்கு எதிர்ப்பினை தெரிவித்து இருந்தார்.
ரசிகர்களின் கொந்தளிப்பு..
இந்நிலையில் தளபதி விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் விமல் தற்போது கூறிய விஷயமானது பெரும் கொந்தளிப்பை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு காரணம் நடிகர் விமல் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் திருச்செந்தூருக்கு நேற்று முருகனை தரிசனம் செய்ய சென்று இருக்கிறார்.
மேலும் இவர் தற்போது தேசிங்கு ராஜா இரண்டு மற்றும் போகும் இடம் வெகு தூரம் இல்லை என்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கோயிலில் வைத்து பல ரசிகர்கள் அவரோடு செல்ஃபி எடுத்துக் கொண்டதை அடுத்து பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது பத்திரிக்கையாளர்களில் ஒருவர் நடிகர் விஜயின் அரசியல் வருகையைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் விமல் சிரித்தபடி தெரியல என்று சொல்லி ஜகா வாங்கி கிளம்பிவிட்டார். இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதனை அடுத்து தளபதி விஜய் அரசியல் கட்சி தொடங்கியது கூட அறியாமலா நடிகர் விமல் இருக்கிறார் என்ற ரீதியில் விஜயின் ரசிகர்கள் விமல் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
மேலும் இந்த விஷயமானது தற்போது பரபரப்பாக இணையங்களில் வெளி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.