நீ அதை நடத்து..! நான் பாத்துக்குறேன்.. ஒரு சாமானியனுக்காக ஜெயலலிதா செய்த மிரட்டல் சம்பவம்..!

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் நடிகர் எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிக சாதனைகளை செய்தவர் நடிகை ஜெயலலிதா. தன்னுடைய 15 வது வயதிலேயே சினிமாவிற்கு வந்த ஜெயலலிதா ஆரம்பத்தில் நிறைய கஷ்டங்களை சந்தித்தாலும் கூட அதற்குப் பிறகு சமூகத்தை எதிர்த்து நிற்க பழகிக் கொண்டார்.

அந்த வகையில் எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க கட்சியின் தலைமை பொறுப்பை யார் ஏற்பது என்கிற பிரச்சனை வந்த பொழுது அதில் களம் இறங்கி தனக்கென தனி இடத்தை பிடித்தார் நடிகை ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து முதலமைச்சராகவும் நிறைய சீர்த்திருத்த திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்துள்ளார்.

நீ அதை நடத்து

முக்கியமாக ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு இருந்த கடைசி ஐந்து வருடங்களில் எக்கச்சக்கமான நன்மைகளை மக்களுக்கு செய்தார் ஜெயலலிதா. இலவச மடிகணினி வழங்குதல் அனைவருக்கும் குறைந்த விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகம் திட்டம் மாதிரியான எக்கச்சக்கமான திட்டங்களை அப்போது நிறைவேற்றினார் ஜெயலலிதா.

பெரும்பாலும் பிரபலமாக இருப்பவர்கள் ஏழை மக்களிடம் அவ்வளவாக பழக மாட்டார்கள். சொல்லப்போனால் ஏழைகளை கண்டு கொள்ளவே மாட்டார்கள் என்பதுதான் வெளியில் பேசப்படும் விஷயமாக இருக்கும். ஆனால் ஒரு டீக்கடைக்கார்ருக்காக ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை குறித்த செய்திகள் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.

நான் பாத்துக்குறேன்

எப்படி கலைஞர் கருணாநிதிக்கு கோபாலபுரம் வீடு இருக்கிறதோ அதேபோல ஜெயலலிதாவிற்கு போயஸ் கார்டன் வீடு இருந்து வந்தது. ஜெயலலிதா முதலமைச்சராக ஆன பிறகு அந்த போயஸ் கார்டன் சாலையில் ரோட்டோரமாக டீக்கடை வைத்திருந்த ஒரு நபரிடம் அங்கு வந்த அதிகாரிகள் கடையை நீக்குமாறு கூறினார்கள்.

ஏன் என்று அவர் கேட்ட பொழுது ஜெயலலிதா முதலமைச்சர் ஆகிவிட்டார் இனி இந்த தெருவில் முக்கிய பிரமுகர்கள் அதிகமாக வருவார்கள். அந்த இடத்தில் இப்படி ஒரு ரோட்டோர டீக்கடை இருக்கக்கூடாது என்று அவர்கள் கூறிவிட்டனர்.

இந்த நிலையில் ஜெயலலிதா பதவி ஏற்பதற்காக காரில் ஏறிய பொழுது அங்கே டீ கடை இல்லாததை பார்த்திருக்கிறார். உடனே அவர் அதிகாரிகளிடம் ஏன் அந்த டீக்கடை இல்லை என்று கேட்ட பொழுது அவர் கடையை செய்து போய்விட்டதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

ஜெயலலிதா செய்த மிரட்டல் சம்பவம்

அவர் ஏன் காலி செய்தார் என்று எனக்கு தெரிய வேண்டும். நான் திரும்பி வருவதற்குள் அவரை வரச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு ஜெயலலிதா முதலமைச்சர் பதவி ஏற்க சென்றுருக்கிறார். அதன் பிறகு ஜெயலலிதா திரும்ப வந்த பொழுது அந்த டீக்கடை நபரும் காத்திருந்திருக்கிறார்.

அவரிடம் காரணம் கேட்ட பொழுது நீங்கள் முதல்வரானதால் இனி இங்கு நான் கடை போடக்கூடாது என்று கூறிவிட்டனர் என்று அந்த நபர் கூறி இருக்கிறார். அதனை கேட்ட ஜெயலலிதா நீங்க டீக்கடை போடுங்க உங்களை யாரு எதிர்க்கிறான்னு நான் பார்க்கிறேன் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் சென்னை கமிஷனரை அப்பொழுதே அங்கு வரவழைத்து இவருக்கு காவலர்களால் எந்த பிரச்சனையும் வரக்கூடாது.

இவர் இங்கு தான் டீக்கடை வைத்துக் கொள்வார் என்று கூறியிருக்கிறார் அப்போது முதல் இப்போது வரை அந்த நபர் அங்கு தான் டீக்கடை வைத்திருக்கிறார். இந்த செய்திகளை அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்தும் இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version