vijay

“அதை நான் பாத்துக்குறேன்..” விஜய்யை அட்டாக் செய்தார் முதல்வர் ஸ்டாலின்..!

நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாட்டில் பாசிசம் பாசிசம் என சிறுபான்மை பெரும்பான்மை என இரண்டு சமூகங்களை மறைமுகமாக உருவாக்கி அவர்களுக்குள் ஒரு பயத்தை உண்டு பண்ணி அண்ணா பெரியார் போன்றவர்களின் பெயர்களை பயன்படுத்தி திராவிட மாடல் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் நமக்கு அரசியல் எதிரிகள் என்று திமுகவை கடுமையாக சாடி இருந்தார் நடிகர். விஜய் மேலும் நான் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பேசுவதால் எனக்கு பயம் என்று நினைத்து விட வேண்டாம்.

நாங்கள் தனிப்பட்ட நபரை தாக்குவதற்காக அரசியல் கட்சி தொடங்கவில்லை. அது எங்களுடைய வேலை கிடையாது. ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க நாங்கள் வந்திருக்கிறோம்.

எங்களுடைய அரசியல் இப்படித்தான் இருக்கும் என பேசி இருந்தார். மேலும் தமிழக வெற்றிக்கழகத்துடன் சேர்ந்து பயணிக்க விருப்பமுள்ள கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொடுக்கப்படும். இதுதான் உண்மையான சமூக நீதி. இதுதான் உண்மையான மாற்று அரசியல் என்று வெளிப்படையாக தன்னுடைய கூட்டணி குறித்த நிலைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.

இவருடைய இந்த பேச்சு தமிழகம் முழுதும் பொது மக்களிடையே மற்றும் அரசியல் கட்சியினுடைய மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விஜயின் இந்த பேச்சுக்கு தன்னுடைய பதிலை கொடுத்து நேரடியாக விஜய்யை அட்டாக் செய்திருக்கிறார்.

அவர் பேசியதாவது நேற்று வந்தவர்களை பற்றி எல்லாம் கவலைப்பட தேவையில்லை. இந்த இயக்கம் இது போன்ற பலரை பார்த்திருக்கிறது. கூட்டணி தொகுதி பங்கீடு பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட தேவையில்லை.

அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நமது கூட்டணி வலுவாக இருக்கிறது. வரும் தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என தொகுதி பொறுப்பாளர்களிடம் வலியுறுத்தி இருக்கிறார். இவருடைய இந்த அட்டாக் இணையா பக்கங்களில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

--- Advertisement ---

Check Also

udhayanithi

மக்கள் யாரை ஏத்துக்குறாங்க அதுதான் முக்கியம்… த.வெ.க தலைவர் விஜய் குறித்து உதயநிதி..!

விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்கிற கட்சியை துவங்கியது முதலே அரசியல் தளம் என்பது மக்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *