தைரியமான ஆண்மகன்.. கள்ளச்சாராய பலிக்கு கண்டனம்.. விஜய்யை பாராட்டிய பிரபல இயக்குனர்..!

தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது. காவல்துறை இரும்பு கரம் கொண்டு கள்ளச்சாராயத்தை ஒழிக்கவில்லையா? என்ற கேள்வியை எழுப்பக் கூடிய வகையில் தற்போது கள்ளக்குறிச்சி பகுதியில் நடந்திருக்கும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது.

இது போன்ற நிகழ்வினை யாரும் சற்றும் எதிர்பாராத நிலையில் 25-க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்த மரண செய்தியை கேட்டு தமிழகம் மட்டுமல்லாமல் நாடே சற்று பீதியில் உள்ளது என்று கூறலாம்.

தைரியமான ஆண் மகன்..

இதனை அடுத்து இந்த நிகழ்வு குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளி வருகின்ற வேளையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், தமிழ் திரைப்பட நடிகருமான தளபதி விஜய் வெளியிட்டு இருக்கின்ற கண்டன பதிவினை பார்த்து பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள்.

மேலும் திரை உலகில் முன்னணி நடிகராக இருக்க கூடிய தளபதி விஜய் திரையுலகை விட்டு விலகி முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கின்ற செய்தி உங்களுக்கு தெரிந்திருக்கும்.

இதனை அடுத்து இவர் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கக்கூடிய பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க விஜய் சினிமாவை விட்டு வெளியேறக்கூடிய வருத்தத்தை அவரது ரசிகர்கள் பெற்று இருந்தாலும் தமிழக அரசியலில் மிகச் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தித் தருவார் என்ற முழு நம்பிக்கையோடு அரசியல் களத்தில் பணி செய்து மக்களுக்கு நன்மைகள் தருவார் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

கள்ளச்சாராயம் பலிக்கு கண்டனம்..

அந்த வகையில் இவர் தனது கட்சியை ஆரம்பித்து பல மாதங்கள் கடந்து விட்ட நிலையில் கிணற்றில் போட்ட கல் போல எந்த ஒரு நிகழ்விற்கும் சரியான பதிலடி தராமல் இருந்தது பல்வேறு சந்தேகங்களை மக்கள் மத்தியில் கிளப்பியிருந்தது.

இந்நிலையில் அந்த சந்தேகங்களுக்கு தெளிவான பதிலினை தரக்கூடிய வகையில் தற்போது கள்ளகுறிச்சி பகுதியில் இருக்கும் கருணாபுரம் என்ற பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 25 பேருக்கும் மேற்பட்டோர் காலமான செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமாக இறைவனை பிராத்திப்பதாகவும் தளபதி கூறி இருக்கிறார்.

விஜய்யை பாராட்டிய பிரபல இயக்குனர்..

 

அத்தோடு கள்ளச்சாராய பலி குறித்து நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இதற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

மேலும் நடிகர், நடிகைகள் அனைவரும் இந்த விவகாரத்தை எளிமையாக கடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் அதிமுக ஆட்சியின் போது நடிகர்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்த நடிகர்கள் இப்போது வாயே திறக்காமல் இருப்பதன் ரகசியம் என்ன என்று தெரியவில்லை. 

இந்நிலையில் முதன்முறையாக நடிகர் விஜய் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இதனை பார்த்த பிரபல இயக்குனர் மோகன் ஜி அவர்கள் தைரியமான ஆண்மகன் என விஜய்க்கு தன்னுடைய பாராட்டுகளை பதிவு செய்திருக்கிறார். இவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் தைரியமாக ஆண்மகன் என்று சித்தரித்த மோகன் ஜிக்கும் தளபதி விஜய்க்கும் பாராட்டுதல்களை தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல் இது போன்ற நிகழ்வுகளுக்கு அனைவரும் கண்டன குரல் எழுப்புவதோடு நிகழ்வுகள் நடக்காமல் இருக்க உரிய வழியை தேட வேண்டும் என்பதை சொல்லி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version