தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் தளபதி விஜய் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் கையோடு விரைவில் என்ற திரைப்படமானது திரையரங்குகளில் வெளிவர உள்ள நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து விரைவில் அரசியலில் முழு நேரம் களம் இறங்கப் போவதாக அறிவித்திருந்த தளபதி விஜய் அண்மையில் கட்சிக்கான கொடியினை வெளியிட்டு பரபரப்பை அதிகப்படுத்தி இருக்கிறார்.
இளைஞர்கள் விஜய் கட்சியில் சேராமல் இருக்க..
இவர் கட்சிக் கொடியை வெளியிட்டு கொடி பாடலையும் வெளியிட்டதை அடுத்து பல்வேறு வகைகளில் விமர்சனங்கள் எழுந்தது. மேலும் இவர் கொடியில் பிளிரும் இரண்டு யானைகளும், வாகை மலரும் இருந்ததை அடுத்து அது பற்றி கருத்து விமர்சனங்கள் பல்வேறு வகைகளில் வெளிவந்தது.
இதை அடுத்து கட்சிக்கொடியை வெளியிட்ட மறுநிமிடமே சர்ச்சைக்கு உள்ளானது. இதற்கு காரணம் பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னம் என்ற கொடியில் இடம்பெற்று இருப்பதை பார்த்து விரைவில் இது சம்பந்தமாக தேர்தல் நிர்வாகிகளை சந்தித்து இவரது கொடிக்கு தடை தரப்படலாம் என்ற பேச்சுக்கள் எழுந்தது.
மேலும் தமிழ் ஈழத்தின் தேசிய மரமான வாகை மரத்தின் மலர் வாகை பூ இவரது கொடியில் இடம்பெற்று இருப்பதை அடுத்து அது நிமித்தமாகவும் எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தது. எனினும் ஒரு வழியாக இந்த மலர் சங்க காலத்தில் அரசர்கள் வெற்றிக்கு பிறகு அணியக்கூடிய மாலையில் இடம் பெற்றிருந்ததை கூறி இருந்தார்கள்.
அடுத்தடுத்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தளபதி விஜய்யின் அடுத்த கட்ட நகர்வுகள் அனைத்தையும் அரசியல்வாதிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்ற வேளையில் வருகின்ற 2026 சட்டசபை தேர்தலை எதிர் கொள்ளத்தான் விஜய் தற்போது களம் இறங்கியுள்ளார் என்ற செய்திகள் வெளி வந்துள்ளது.
இத கட்டாயம் பண்ணுங்க..
இதை அடுத்து விஜய் ஆளும் கட்சியான திமுகவிற்கு மிகப்பெரிய டப்பை கொடுப்பார் என்று அரசியல் நிபுணர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருவதோடு ஒரு பெரிய அளவில் ஆன வாக்கு வங்கியை உடைக்கக்கூடிய சக்தி தளபதி விஜயின் கட்சிக்கு உள்ளது என்று கூறி இருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியில் நடைபெற்ற திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். இந்த பேச்சில் அவர் இந்திரா காந்தி, காமராஜரை எதிர்த்து திமுக அரசியல் செய்த விஷயத்தையும் இவர்களை எல்லாம் விட அண்மையில் புதிய கட்சியை ஆரம்பித்திருக்கும் தளபதி விஜய் பெரிய ஆளா? என்று மறைமுகமாக சாடினார்.
இதனை அடுத்து இயக்குனர் சீமானை பேசிய அவர் பேசிப் பேசியே தொண்டை வறண்டு போயிருக்கும் என்று நக்கலாக சொன்னதோடு மட்டுமல்லாமல் குங்கும பொட்டாம், நடுவில் சந்தன பொட்டாம் இதில் தூங்கு மூஞ்சி பூவேறு இந்த கட்சி விளங்குமா? என்று தமிழக வெற்றி கழக கட்சியைப் பற்றி விளாசித் தள்ளினார்.
மேலும் இன்றைய சூழ்நிலையில் பொதுவாக நடிகைகள் என்றால் சீரியல் மசாலா விளம்பரங்கள் என்று சென்று விடுவார்கள். அதுவே நடிகர்கள் என்றால் அரசியலுக்கு வருகிறேன். மக்களுக்கு நன்மை செய்யப் போகிறேன் முதல்வர் ஆகிறேன் என கிளம்புகிறார்கள் என விமர்சனம் செய்தார்.
திமுக அமைச்சர் பேச்சு..
இப்படி தளபதி விஜயின் கட்சியை பற்றி பல்வேறு வகைகளில் தனது விமர்சனங்களை செய்திருந்த முன்னாள் திமுக அமைச்சர் திரு ஆவடி நாசர் விஜயின் கட்சியில் இளைஞர்கள் சேராமல் இருக்க எதை சொன்னால் போதும் என்று பேசிய பேச்சு தற்போது இணையத்தில் பேசும் பொருளாகிவிட்டது.
இதனை அடுத்து அவர் என்ன சொன்னார் என்று தெரிந்தால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர் இளைஞர்கள் விஜய் கட்சியில் சேராமல் இருக்க அதிகப்படியான இளைஞர்களை திமுகவில் சேர்க்க உழைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
யாரும் எதிர்பாராத சமயத்தில் தளபதி விஜயின் கட்சியை தாக்கிப் பேசி இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்தக் கட்சிகள் இளைஞர்கள் சேராமல் இருக்க ஒரு சூப்பர் ஐடியாவையும் திமுகவின் முன்னாள் அமைச்சர் திரு ஆவடி நாசர் அவர்கள் பேசியதை அடுத்து விஜய் ரசிகர்கள் சற்று காண்டாகி இருக்கிறார்கள்.