இத யாரு எதிர்த்தாலும் நிச்சயம் நிர்மூலம்.. உதயநிதியை மிரட்டி எச்சரிக்கை விட்ட பவன் கல்யாண்!!

அரசியல் சதுரங்கத்தில் தற்போது பவன் கல்யாண் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல் தமிழக துணை முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கும் உதயநிதிக்கு எச்சரிக்கை மணியை அடித்தது போல உள்ளது.

ஏற்கனவே சனாதன தர்மத்தை பற்றி சகட்டு மேனிக்கு பேசிய உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக தாக்கக்கூடிய வகையில் ஓராண்டு கழித்து ஆந்திர துணை முதல்வர் பேசியிருக்கும் பேச்சால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசும் போது சனாதன என்பது கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா கொரோனாவை போல ஒரு விதமான வைரஸ் அதை உடனடியாக ஒழித்து கட்ட வேண்டும் என்று பேசினார்.

உதயநிதியின் இந்த பேச்சானது இந்தியா முழுவதும் இந்துக்களின் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அதற்காக அவர் மீது பீகார், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழக்குகள் தொடுக்கப்பட்டது.

அது போல தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சனாதனம் குறித்து உதயநிதி பேசிய கருத்து தவறானது அவருடைய சிந்தனை வித்தியாசமாக உள்ளது என்று கூறினார்.

இந்நிலையில் தற்போது ஜனசேனா கட்சித் தலைவரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

மேலும் பேசும் போது இங்கு நிறைய தமிழ் பேசும் மக்கள் இருக்கிறீர்கள். எனவே தமிழிலேயே நான் கூறுகிறேன். நமது அண்டை மாநிலத்தை சேர்ந்த இளம் அரசியல் வாரிசு சனாதன தர்மம் வைரஸ் போன்றது அதை அழிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

அப்படிப் பேசக் கூடியவர்களுக்கு நான் ஒன்றை இந்த மேடையில் இருந்து தெரிவித்துக் கொள்கிறேன். சனாதன தர்மத்தை யார் அழிக்க நினைத்தாலும் கடவுள் பாலாஜியின் பாதத்தில் இருந்து சொல்லுகிறேன் அவர்கள் அழிந்து நிர்மூலமாக போவார்கள்.

அது மட்டுமல்லாமல் நமது சனாதன தர்மத்தை தாக்கி பேசுபவர்களை கண்டும் காணாமல் இருப்பதால் மதச்சார்பின்மை பாதுகாக்கப்படுகிறது என்று பேசுவது தவறு என்று சொல்லப்படுகிறது.

பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிகள் இடம் பெற்றுள்ள ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் உதயநிதியை கடுமையாக விமர்சித்து இருப்பது மட்டுமல்லாமல் சாபம் விடக்கூடிய வகையில் பேசியிருக்கும் செயலானது திமுக மத்தியில் புயலை கிளப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து விரைவில் பதில் அடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version